ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மஹா போதியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
புண்ணிய ஸ்தலத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறிநிவாச தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், ஜயஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களிடம், ஜனாதிபதி கலந்துரையாடினார்.









