புதிய கொரோனா கொத்தணிகள் கண்டறியப்பட்ட எந்தப் பகுதியையும் தனிமைப்படுத்த உடனடித் திட்டம் எதுவும் இல்லை என சுகாதார சுகாதார அமைச்சின் பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு பிரிவு தலைவர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நாட்டில் வைரஸ் பரவுவதை தடுப்பதே முதல் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட குறைந்தது ஐந்து மாவட்டங்களில் புதிய கொரோனாக் கொத்தணிகள் தோன்றியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, அனுமதி பெறாத நிகழ்வுகளை நடத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சில பகுதிகளில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களே புதிய் கொத்தணிகள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
இவ்வாறான, ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்படுமானால் நாட்டை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மஹா போதியில் ஜனாதிபதி வழிபாடு!






