கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு 9 பேருக்கு தடையுத்தரவு!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு, கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழங்கப்பட்ட தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன.

குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18 ஆம் ஆண்டுகளில் மாவீர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

இந்நிலiயில், 2019ஆம் ஆண்டுக்க பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாவீரர் நாள் நினைவேந்தல்களிற்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டன.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிசாரால், 9 பேருக்கு எதிராக இன்று நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபைதவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் தவபாலன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான, சுப்பையா, சிவகுமார், இயேசுதாசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி ஆகியோருக்கே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபர்கள் அல்லது அவர்களின் உறவுகள், ஆர்வலர்கள் சமய குருமார்கள், ஒத்துழைப்பாளர்கள், அனைவரும் தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்பின் இறந்தவர்களை நினைந்து எந்த செயலையும் குறித்த காலப்பகுதியில் செய்யகூடாது என கட்டளை வழங்குமாறு நீதிமன்றில் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜே.வி.பி. கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது! ரவிகரன் கேள்வி

Leave a Reply