பெயர் மாற்றத்துடன் உள்ள தடையுத்தரவை வாங்காது பொலிசாரை திருப்பி அனுப்பிய பீற்றர் இழஞ்செழியன்!

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன், பெயர் மாற்றத்துடன் உள்ள தடையுத்தரவை வாங்காது பொலிசாரை திருப்பி அனுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி, முல்லைத்தீவு பொலிசாரால் 17 ஆம் திகதி மாங்குளம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதற்மைய, வழக்கை அராய்ந்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளையை இன்று முல்லைத்தீவு பொலிசார் பீற்றர் இழஞ்செழியன் இல்லத்திற்குச் சென்று கையளித்திருந்தனர்.

இதன்போது, நீதிமன்ற கட்டளையில் உள்ள பெயரில் தனது தந்தையாரின் பெயர் தவறாக உள்ளதாகவும், இந்த உத்தரவு எனக்கு பொருந்தாது எனவும் பொலிஸாருடன் வாக்குவாதபட்ட பீற்றர் இழஞ்செழியன் தடையுத்தரவை பெறாது பொலிசாரை திருப்பி அனுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு 9 பேருக்கு தடையுத்தரவு!

Leave a Reply