
யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாவட்ட கொரோனா செயலணியானது எதிர்வரும் செவ்வாய் காலை 10 மணிக்கு கூடி தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயவுள்ளது என்று யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த செயலணிக் கூட்டம், யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரின் தலைமையில் சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனைய துறைசார் அதிகாரிகளுடன் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த செயலணிக் கூட்டத்தின்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுள்ள நிலைமையில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.





