நுவரெலியா, தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றின், இரண்டாம் மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், காயமடைந்த நபர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மூன்று மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படாமையே குறித்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






