
முல்லைத்தீவு- தண்ணீரூற்றில் பசி போக்கும் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமரர் சி.சுபத்திரன் நினைவாக தண்ணீரூற்றில் அமைந்துள்ள சுபத்திரன் இல்லத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சுபத்திரனின் பெற்றோரின் நிதிப்பங்களில் சுபத்திரன் இல்லத்தில் அமைக்கப்பட்ட இந்த நிலையம், முள்ளியவளை ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்களின் ஆசியுடன் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் கலந்து கொண்டார்.





