வாகனங்களின் விலைகள் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
மேலும், வாகன இறக்குமதியாளர்கள் 2022 வரவு செலவுத் திட்டத்திலிருந்து உயிர்நாடியை எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், அது அவர்களுக்கு சாதகமாக எந்த மதிப்பையும் சேர்க்கவில்லை. கடந்த சில மாதங்களாக வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எமக்குச் சாதகமாக எந்தவொரு பெறுமதியையும் சேர்க்கவில்லை.
முன்னைய பிரச்சினைகளையே தாங்கள் தொடர்ந்து எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






