மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மட்டு. பொலிஸாரும் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!

மாவீரர் நாளை நினைவு கூருவது தொடர்பில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தால், நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கக்கோரி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், அருட்தந்யைர்கள், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட்டோரின் பெயர்கள் உள்ளீர்க்கப்பட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்ட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.கே.கெட்டியாராச்சியால் இவ்வறிக்கை இன்று மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் வடக்கு கிழக்கு ஆயர்களால் 20 ஆம் திகதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடர்பான அறிக்கை என்பவற்றை மையப்படுத்தி இத் தடையுத்தரவு கோரும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், தமிழீழ விடுதலை இயக்கத்தின பிரதித் தலைவர் பிரசன்னா இந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் அமைப்பின் இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் ஆகியோருக்கும் அவர்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply