வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமுள்ள வவுனியா  வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு பெரும்பாண்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் ச.தணிகாசலம் தலைமையில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது 2022ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் வாசிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களாலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அதிகளவான உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்நிலையில் பாதீட்டுக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜனபெரமுன, ஜக்கியதேசிய கட்சி, சுதந்திரக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முண்ணனி, சுயேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 15 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த 8 உறுப்பினர்களில்7பேர் வாக்களித்ததுடன் ஒருவர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை,

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் நடுநிலைமை வகித்திருந்தார். இதனால் 2022ஆம் ஆண்டுக்கான சபையின் பாதீடு பெரும்பாண்மை வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது.

Leave a Reply