
நமது நிருபர்
பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெற உள்ள நிலையில் முஸ்லிம் கட்சி தலைவர்கள் இரு தலை கொள்ளி எறும்புகளாக திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் 07 எம். பிகள் பட்ஜெட்டை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டிலும் பற்றுறுதியாக உள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இவர்களில் ஹாபிஸ் நஸீர், ஹரிஸ் ஆகியோரும் அடங்குகின்றனர். ஆனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே காட்டுகின்றனர்.
தலைமைகளின் முடிவை மீறி செயற்படுபவர்களின் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இத்தலைமைகள் எச்சரித்து உள்ளபோதிலும்,07 எம். பிகளும் அவற்றை பொருட்படுத்தி இருப்பதாக தெரியவில்லை.
இதேநேரம் இந்த எம்பிக்கள் பட்ஜெட்டை ஆதரித்து வாக்களித்து கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது என்று ரிஷாட் பதியுதீன், ஹக்கீம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில்,முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் என்று கூறிய ஆராயலாம் என்று தெரிய வருகின்றது.
இதனால், தலைவர்கள் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கின்ற போதிலும் 07 எம்.பிகளும் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்கிற நிலைமை உருவாகியிருக்கிறது.
பட்ஜெட்டை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் பகீரத முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன . ஆனால்,எதிர் தரப்பை சேர்ந்த தலைவர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோரின் எம். பிகள் அரசாங்கத்துக்கு முட்டு கொடுக்கின்றனர்.
எதிர் காலத்தில் 07 எம். பிகளும் கூட்டு சேர்ந்து தனி அணியாக செயற்பட கூடும் என்கிற அச்சமும் இரு தலைவர்களுக்கும் இருப்பதாக தெரிய வந்திருக்கின்றது.






