வயோதிபரை மோதி தள்ளிய பஸ்!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மோதியதில், வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மாத்தளை, தம்புள்ளை பொலிஸ் பிரிவு ஹபரண வீதி, அவுடங்காவ பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து ஹபரண நோக்கிப் பயணித்த பஸ்ஸே, பாதசாரி மீது மோதியுள்ளது .

இதனை, பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி அடுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த முதியவர் , உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply