நாட்டில் உள்ள நெருக்கடி நிலையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்! உதய கம்மன்பில

நாட்டில் காணப்படும் நெருக்கடி நிலையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படிஇ அரசாங்கத்தில் உள்ள ரூபா பற்றாக்குறை மற்றும் நாட்டுக்கு தேவையான டொலர் கிடைக்காமை போன்றவையே நாடு எதிர்நோக்கும் நெருக்கடி என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்இ வரம்பிற்கு அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்வதே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply