முல்லைத்தீவில் குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வு, பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது

“செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் , ஒவ்வொன்றும் தலா நான்கு மில்லியன் பெறுமதியான இருபது குடிநீர் திட்டங்கள் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நான்கு இடங்களில் நனோ தொழிநுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

இதனை தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் காதலியார்சமணங்குளம், கற்சிலைமடு, ஒலுமடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும் குறித்த குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply