இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் ஜெலட்டின் குச்சிகள் 998 கிலோ மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினரும், பொலிசாரும் இணைந்து நடத்திய தேடுதலின்போது சந்தேகத்திற்கு இடமான இருவர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்தே குறித்த ஜெலட்டின் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, சந்தேக நபர்களும் சான்றுப் பொருட்களும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








