ஜனாதிபதி மிரிஹான வீட்டில் தங்கியிருப்பதால் அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு இடையூறு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருப்பது நல்ல விடயம் என்றாலும், அப்பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி அங்கு இருப்பதால் குறித்த பிரதேசத்திலுள்ள வீடுகளை பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக சோதனையிடுவதாகவும், இதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் அப்பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லங்கள் அமைந்துள்ள போதிலும், ஒரு நாள்கூட ஜனாதிபதி அவைக்கு செல்லவில்லை. அவை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply