விடுதலை புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தை அனுஸ்டிக்க தடை உத்தரவு!

எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் 20 தொடக்கம் 27 ஆம் திகதி வரை மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் குறித்த தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பா.அரியநேத்திரனின் அம்பிளாந்துறை இல்லத்திற்கு சென்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தடை உத்தரவை கையளித்துள்ளனர்.

இந்த தடை உத்தரவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பட்டிப்பளை பிரதேசபை தவிசாளர் சீ.புஷ்பலிங்கம்,நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணாக்கியன், கோ.கருணாகரம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் த.சுரேஷ், முன்னாள் போராளிகளான நடராசா சுரேஷ், தம்பித்துரை கஜேந்திரன் ஆகிய ஏழு பெயர்கள் உள்ளடங்கப்பட்டுள்ளன

இன்று 725 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

Leave a Reply