2010ஆம் ஆண்டிலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2010ஆம் ஆண்டிலிருந்து டெங்கு நோய்க்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சியை காண முடிகிறது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 116,175 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், 2010ஆம் ஆண்டு 34,188 டெங்கு நோயாளர்களும், 2011 ஆம் ஆண்டு 28,473 டெங்கு நோயாளர்களும், 2012 ஆம் ஆண்டு 44,461 டெங்கு நோயாளர்களும், 2013ஆம் ஆண்டு 32,063 டெங்கு நோயாளர்களும், 2014ஆம் ஆண்டு 47,502 டெங்கு நோயாளர்களும், 2015ஆம் ஆண்டு 29,777 டெங்கு நோயாளர்களும், 2016ஆம் ஆண்டு 55,150 டெங்கு நோயாளர்களும், 2017 ஆம் ஆண்டு 186,101 டெங்கு நோயாளர்களும், 2018ஆம் ஆண்டு 51,659 டெங்கு நோயாளர்களும், 2019 ஆம் ஆண்டு 105,049 டெங்கு நோயாளர்களும், 2020 ஆம் ஆண்டு 31,139 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவது தொடர்பில், வைத்தியசாலைகளில் சுகாதார அதிகாரிகளினூடாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.

Leave a Reply