மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை சிறுத்தோப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முச்சக்கர வண்டியொன்றின் மீது டிப்பர் வாகனமொன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளுடன் ஏற்படவிருந்த திடீர் விபத்தை தடுப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதி மறுபக்கம் முச்சக்கர வண்டியை திருப்பும் போது, தலை மன்னார் பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2010ஆம் ஆண்டிலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!






