தீங்கு விளைவிக்கும் பக்டீரியா இருப்பதால் ஏற்க மாட்டோம் என நிராகரித்த சீன சேதன உரத்தை கடைசியாக உரிய கப்பல் தாமதக் கட்டணச் செலவுகளுடன் இறக்கி, ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசு இணங்கியிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன.
ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த உரத்துக்கு, அதை உரிய காலத்தில் இறக்காமல், கடலில்
அலைய விட்ட தாமதத்துக்கான கட்டணமும் சேர்த்து மேலதிகமாக 35 மில்லியன் அமெரிக்க டொலரும் செலுத்தி, அதனை இலங்கை இறக்குவதற்கு இணங்கியிருப்பதாகத் கொழும்புச் செய்தி ஒன்று தெரிவித்தது.
சீன – இலங்கை நட்புறவில் வீண் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக அரச உயர்
வட்டாரம் ஒன்றை மேற்கொள்காட்டி செய்தி ஏஜென்ஸி ஒன்று தகவல் வெளியிட்டது.
கேள்விப்பத்திர நடைமுறைக்கு அமைய இலங்கை இந்த சேதன உரத்துக்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு விநியோகக்கட்டளை வழங்கியிருந்தது.
கப்பலில் அனுப்பட்ட உரம் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த சமயத்தில், அதன் மாதிரிகளை பகுப்பாய்வு செய்த
இலங்கை தேசிய தாவரங்கள் தனிமைப்படுத்தல் அமைப்பு. இந்த உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளன என்று தெரிவித்தது.
இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட சோதனைச் சான்றிதழ்கள் அப்படி வந்தமையால், அந்த உரத்தை ஏற்க
முடியாது என இலங்கை பெரிய ‘பிகு’ பண்ணியது.
எனினும், திடீரென இலங்கை அதிகார பீடம் சீன வற்புறுத்தலுக்கு அடி பணிந்து, மண்டியிட்டு, உரிய தாமதக் கட்டணங்களுடன் அதனை இறக்குமதி செய்ய இணங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றமை பல மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் நீதிமன்றம் வரைச்சென்றிருப்பதும் இந்த உரத்துக்கான கொடுப்பனவு எதனையும் வழங்கக் கூடாது என சம்பந்தப்பட்ட மக்கள் வங்கிக்கு நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு வழங்கியிருப்பதும் உரத்துக்கான கொடுப்பனவை வழங்கத் தவறியமைக்காக இலங்கையின் மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலில்
சேர்த்திருப்பதும் – தெரிந்தவையே.






