23 தமிழக மீனவர்கள் தாயகம் பயணிப்பதில் நெருக்கடி

பருத்தித்துறை நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரும், தாயகம் பயணிப்பதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய, தமிழக மீனவர்கள் 23 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின், தொடர்ந்தும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி 23 மீனவர்களிற்கும் 10 வருடங்களிற்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை பருத்தித்துறை நீதி மன்றினால் விதிக்கப்பட்டதன் பெயரில் தாயகம் திரும்ப தயாராகினர்.

இந்த நிலையில் இந்த மீனவர்கள் அனைவரையும் மீரிகம அழைத்துச் செல்லும் நோக்கில் மேற்கொண்ட பரிசோதனையில் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா தொற்று இனம் காணப்பட்டவர்கள் கிளிநொச்சியில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.

இதன் காரணமாக விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதில் மேலும் காலதாமதம் ஏற்படக் கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Leave a Reply