கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி!

கதரஸ்கொடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பலகாமம் சிராஜ் நகரை சேர்ந்த 56 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான நௌபர் ஹாஜியார் என்றழைக்கப்படும் எம்.எஸ்.எம்.கரீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தம்பலகாமம் நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் வான் மோதியதில் வானில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சாரதியின் அருகில் இருந்தவரே உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் ஜனாசா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதரஸ்கொடுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply