ஊர்காவற்துறை பகுதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியிலேயே இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று காலை குடும்ப உறவினர்கள் தூக்கத்தில் இருந்து விழித்து பார்த்தபோது, குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், சடலத்தை கண்காணித்ததோடு,மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 50 வயதுடைய சிவஞானம் ரவிச்சந்திரன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எனினும் குறித்த நபரின் உயிரிழப்பிற்கான காரணத்தை இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை.






