உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள தயாராவோம்

வர்த்தக அமைச்சர் அழைப்புகொழும்பு, நவ.20 எதிர் காலத்தில் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நிகழ்வொன்றில் பேசிய அமைச்சர், சீனாவில் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை உள்ளது. அதே நேரத்தில் அவர்களின் உணவுத் தேவையும் அதிகமாக உள்ளது. 

கொரோனவைரஸ் இல் இருந்து உருவாகும் உலக உணவு பற்றாக்குறைக்கு நாடு தயாராக வேண்டும் என்று சீன அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.

சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையும் ஆபத்தில் இருக்கிறது. எனவே, இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உணவு வழங்கல் மற்றும் அதிக பொறுப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply