மாத்தறை டச் கோட்டைக்குள் அமைந்துள்ள சிறைச்சாலையில் உள்ள ஒரே ஒரு தமிழ் அரசியல் கைதியாகிய தங்கவேல் நிமலனை இன்று ஞாயிற்றுக்கிமை பிற்பகல் 2.00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
அவர்கள் சந்தித்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலனை இன்று சந்தித்தோம். இவர் சார்ந்த வழக்கில் மூன்று சந்தேகநபர்கள் இருக்கும் நிலையில், அவர் மட்டும் தனிமைப்படுத்தி மாத்தறை சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் கொழும்பு மெகசின் சிறைச்சாயில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், ஒரே ஒரு தமிழ் நபராக இங்கு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் மொழி சார்ந்த வசதிகளும் மிகவும் குறைவாக உள்ளது.
ஆகையால், அவரை தன்னுடைய வழக்கு சார்ந்த ஏனைய இருவரும் உள்ள கொழும்பு சிறைச்சாயில் மாற்றுமாறு எங்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அமைச்சர் அலிசப்ரியுடன் பேசுவோம் என நாங்கள் தெரிவித்துள்ளோம். மேலும், கைதிகளை விடுவிப்பதற்குரிய அழுத்தங்களை தொடர்ந்து கொடுப்போம்.
அதேசமயம், இது நிறைவேறும் வரை கைதிகளை தங்கள் சொந்த ஊருக்கு அருகில் இருக்கக் கூடிய சிறைச்சாலைகளுக்கு மாற்றியமைக்கக் கூடிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்.
இதுதொடர்பில், இந்த வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியிலும் கூட உரிய அமைச்சுக்கு கீழ் வரக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இந்த விடயங்களை வலியுறுத்துவோம் எனும் விடயத்தையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை! அனந்தி






