பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்டத்தில் பங்கேற்ற 12 பேர் கைது!

மாத்தறை, பெலேன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில், பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 12 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் களியாட்ட நிகழ்வுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் வந்திருந்தனர் எனவும், களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 6 பேரிடமிருந்து 1,695 மில்லி கிராம் கொக்கைன், இருவரிடமிருந்து 1,250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹோட்டல் அறையொன்றில் ஆணின் சடலம் மீட்பு!

Leave a Reply