வவுனியாவில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

வவுனியா ஓமந்தை சோதனை சாவடியில் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் போதை பொருளை உடமையில் வைத்திருப்பதாக இராணுவம் மற்றும் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை சோதனைசாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டார்.

இதன்போது, அவரது உடமையில் 5 கிராம் கெரொயின் போதைப்பொருள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு ஓமந்தை பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஓமந்தை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி யானை பலி: சட்டவிரோத மின்வேலியை அமைத்தவர் கைது!

Leave a Reply