மாவீரர் வராம் ஆரம்பம்: முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம்!

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும் பொலிசார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரச புலனாய்வாளர்கள், இராணுவம், பொலிஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்

தண்ணீர் ஊற்று சந்தி, ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை விடவும் மாவட்டம் பூராக அமைக்கப்பட்டுள்ள சுமார் 15க்கு மேற்பட்ட வீதி தடைகளில் வீதியால் பயணிப்போர் திடீரென சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதோடு சிலர் பதிவுசெய்யப்படுகின்றனர்.

நுவரெலியாவில் விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்!

Leave a Reply