மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய கடற்படை வீரர் பலி!

தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இன்று காலை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாகொல கடற்படை முகாமில் கடமையாற்றும் 36 வயதுடைய கொட்டபொல, கெடபருவகம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவீரர் வராம் ஆரம்பம்: முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம்!

Leave a Reply