அ.தி.மு.க. தலைமை அலுவலக மோதல் : சிபிசிஐடி பொலிஸார் ஆய்வு

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூலை 11 ஆம் திகதி ஓ. பன்னேர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் அதிமுக அலுவலகத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *