யாழில் சாரணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

யாழ்.நிர்வாக மாவட்டத்தின் காங்கேசந்துறை சாரணர் மாவட்டத்தில் உள்ள சாரணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை அமுல்படுத்தும் கலந்துரையாடல் இன்று மாலை தெல்லிப்பழை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காங்கேசந்துறை சாரணர் மாவட்ட ஆணையாளர் ளு.ஜெயபவன் தலமையில் நடைபெற்றது.

யாழ். நிர்வாக மாவட்டத்தில் யாழ் சாரணர் மாவட்டம், காங்கேசந்துறை சாரணர் மாவட்டம், பருத்தித்துறை சாரணர் மாவட்டம் என மூன்று சாரணர் மாவட்ட பிரிவுகள் இலங்கை சாரணர் சங்கம் மாவட்ட பிரிவுகளைக்கொண்டு இயங்குகின்றது.

இதன்போது, யாழ் மாவட்டத்தில் 05 சாரணர் உத்தியோகத்தர்களுக்கான நியமனப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, சமாதானத்திற்கான செயற்றிட்டம் இலங்கை சாரணர் இயக்கத்தால் நடைமுறைப்பட்டுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அத்திட்டத்திற்கான அறிமுகமும் கொடியும் அறுமுகம் செய்து வைக்கப்பட்டது.

பிரதம ஆணையாளர் ஜெனிற் பீரிட் பெர்னாண்டோ அவர்களுக்கான நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதம ஆணையாளர் ஜெனற் பீரித் பெர்னாண்டோ, இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலய ஆணையாளர் பா.அஜித்குமார் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் வட கிழக்கு மாகாணங்களிற்கான விசேட ஆணையாளர் முகீட் மற்றும் காங்கேசந்துறை சாரணர்கள் மாவட்டத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply