கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணம்!

கிளிநொச்சி ஏ9 வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நேற்று இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இல.403 திருநகர் தெற்கைச் சேர்ந்த 60 வயதுடைய சின்னத்துரை ரஞ்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்தவரின் மனைவி இதற்கு முன்னர் மூன்று தடவை மாரடைப்பு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நினைவேந்தல் உரிமையை எவரும் தடுக்கவே முடியாது! சஜித்

Leave a Reply