கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றிதழ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகார பிரிவின் இலத்திரனியல் ஆவணச் சான்றிதழ் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் 150 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில்  (e-DAS) ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த வாரம் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் இதனால், சேவைகளை வழங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் கிளை சான்றளிப்பு முறைமையும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு தற்போது நிலைமையை சரிசெய்வதில் ஈடுபட்டுள்ளதுடன். அதுவரை சான்றளிப்பு சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 011- 2338812 அல்லது  dgcons@mfa.gov.lk  மூலம் கொன்சியூலர் விவகாரப் பிரிவை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply