யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் கானமயில்நாதன் காலமானார்!

யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் இன்று காலை காலமானார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1942 ஆம் ஆண்டு பிறந்த கானமயில்நாதன் இறுதிவரை பத்திரிகையாளராகச் செயற்பட்டு வந்திருந்தார்.

உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட 1985 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி தொடக்கம் அதன் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டிருந்தார்.

போர்க்காலத்தில் ஊடகவியலாளர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட காலங்களிலும் ஊடகப்பணியாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர்களில் கானமயில்நாதனும் ஒருவராவார்.

போர்க்காலத்தில் ஊடகப்பணியாற்றியமைக்காக 2013 ஆம் ஆண்டு நவம்பர் 27அன்று பிரான்ஸின் பாரிஸ் நகரில் எல்லைகளற்ற செய்தியாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கானமயில்நாதன் இன்று யாழ்ப்பாணத்தில் காலமானதாக தெரியவந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு!

Leave a Reply