விபச்சார விடுதி முற்றுகை: மூவர் கைது!

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாபாடுவ பிரதேசத்தில் விபசார விடுதியொன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விபசார விடுதியை நிர்வகித்து வந்த 40 வயது நபரும், விபச்சார விடுதியை நடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த 37, 52 வயதுகளையுடைய இரு பெண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் நீர்கொழும்பு, கம்பஹா, மொரட்டுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் கானமயில்நாதன் காலமானார்!

Leave a Reply