கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

<!–

கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம் – Athavan News

கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை  ரயில் நிலையத்திலிருந்து 5  ரயில் சேவைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை,  கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதி ஊடாக ஒரு வழி போக்குவரத்து மாத்திரம் இடம்பெறும் எனவும் மூடப்பட்டுள்ள வீதியில் தொடர்ந்து திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய  கூறியுள்ளார்.


Leave a Reply