வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இன்று காலை முதல் முகக்கவசம் அணியாமல் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையின்போது முகக்கவசம் அணியாமல் வீதிகளில் நடமாடும் பலருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் அவர்களுக்கு முககவசம் அணிவித்து அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
இதேவேளை தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்திப்பிடித்த பொலிசார் அதில் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை. இதையடுத்து அவர்களின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
இவ்வாறு நகரில் பல்வேறு நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நடவடிக்கைக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்புக்களை வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.






