அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த தகவல்களை வழங்குவதற்காக இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.






