மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் பொலிசார் கெடுபிடி!

தமிழ் மக்களின் விடுதலைக்காக வித்தாகிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றையதினம் ஆரம்பித்துள்ள நிலையில, வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிசார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி, வவுனியா குளத்தடி மற்றும் நகரின் முக்கிய சந்திகளில் பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிசாரின் விண்ணப்பத்திற்கமைய மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்நாள் தடை மனுவை நிராகரித்தது சாவகச்சேரி நீதிமன்றம்!

Leave a Reply