நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையை விட மதுபோத்தல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையை விட மது போத்தல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 10 கோடிக்கு அதிகமான 180 மில்லி லீற்றர் வெற்று சாராய போத்தல்கள் சுற்றாடலுக்குள் சேர்ந்துள்ளது.

2018ஆம் ஆண்டில் 10 கோடியே 55 லட்சத்து 32 ஆயிரத்து 169, 180 மில்லி லீற்றர் சாராய போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த போத்தல்கள் அனைத்தும் சுற்றாடலுக்குள் சேர்ந்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால், சுற்றாடலுக்கு ஏற்படும் அழிவை தடுப்பதற்காக உடனடியாக 180 மில்லி லீற்றர் போத்தல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் பொலிசார் கெடுபிடி!

Leave a Reply