பட்ஜெட்டை எதிர்ப்போம்!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தாருஸ்லாமில் நடந்த கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *