அரசை விமர்சிக்க அரச ஊழியர்களுக்குத் தடை!

அரச ஊழியர்கள் முகநூல் வழியாக அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சால் இது தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது,

பிரதேச செயலக பணியாளர்கள், கிராம சேவை அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து முகநூலில் கருத்துக்களை பதிவேற்றி வருவதால், தாபன விதி கோவையின் பிரகாரம் அவ்வாறானவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட அரச ஊழியர்களை அடையாளம் காண உள்நாட்டலுவல்கள் அமைச்சு, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியையும் நாடியுள்ளது.

கூடுதலாக கிராம சேவகர்களே இவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைத்து வருவதாக அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.

10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது!

Leave a Reply