
இந்திய திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் பல்வேறு புதுமைகளை புகுத்திய பெருமை இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவின் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற முன்னோடி என்று சொல்லலாம்.
இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் தீவிர பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த இவர் தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.