சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்த வைரஸால் தினம் தினம் இறப்பவர்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாம் பறிகொடுத்த திரையுலக பிரபலங்கள் பலர் உண்டு.
இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் ஸ்வர்க் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் மாதவி.
இவர் மராத்திய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 58 வயதாகும் இவர் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அனுபமா என்ற சீரியலில் அனுபமாவின் தாயாக நடிக்க வந்தார்.
சமீபத்தில் சீரியலில் இருந்து விலகிய இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவருடைய மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.