2022 பாதீடு இரண்டாம் வாசிப்பு: மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2022 ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அத்துடன், 11 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த 13 ஆம் திகதி தொடங்கிய பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்றிருந்தன.

அதற்கமைய, இன்று மாலை 5 மணியளவில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நாளை (23) ஆரம்பமாகி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை 16 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply