முதியோர் இல்லமொன்றில் 28 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

காலி – உனவட்டுன பிரதேசத்திலுள்ள முதியோர் இல்லத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த முதியோர் இல்லத்திலிருந்த 164 பேருக்கு நேற்றைய தினம் துரித அன்டிஜென் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, அவர்களில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 19ஆம் திகதி குறித்த முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply