குரங்குகளை விரட்டித் தருமாறு கோரிக்கை விடுத்த மக்கள்

வேப்பமடு கிராம பகுதி மக்கள், கட்டுப்படுத்த முடியாத குரங்குகளின் தொல்லையால் அவற்றை விரட்டி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புத்தளம் – வேப்பமடு கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட முஹைதீன் நகரில் சுமார் 200ற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் குரங்குகளின் தொல்லையினால் பெரிதும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

குரங்குகள் செய்யும் அட்டகாசங்களினால் வீடுகளில் வைக்கப்படுகின்ற பொருட்களை சேதப்படுத்துகின்றதாகவும், பொருட்களை தூக்கிக் கொண்டு செல்வதாகவும் மரங்களில் காய்க்கின்ற பழங்களை பரித்து நாசம் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குரங்குகளை விரட்டுவதற்கு முற்பட்டால் சீரிப் பாய்ந்து கடிக்க வருவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குரங்குகளை விரட்டுவதற்கு பல அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்தும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குரங்குகளை விரட்டுவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply