கற்பிட்டி அல் அக்‌ஷா தேசிய பாடசாலைக்கு சுகாதார மேம்பாட்டுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு!(படங்கள் இணைப்பு)

கற்பிட்டி , வன்னி முந்தல் மீனவர் சங்கத்தினரால் கற்பிட்டி அல் அக்‌ஷா தேசிய பாடசாலைக்கு சுகாதார மேம்பாட்டுக்கான பொருட்கள் இன்று (13) வழங்கப்பட்டன.

வன்னி முந்தல் மீனவர் சங்கத்தின் உறுப்பினர்களான முஹம்மட் பஹ்மி,  எம்.சிராஜ், முஹம்மது லுக்மான் ஆகியோர் மேற்படி பொருட்களை கற்பிட்டி அல் அக்‌ஷா தேசிய பாடசாலையின் அதிபர் முஸ்தபா அன்சாரிடம் கையளித்தனர்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் முஹம்மட் பசார், பாடசாலை அபிவிருத்தி மேம்பாட்டு குழுவின் செயலாளர் முஹம்மட் மகீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, முதற் கட்டமாக ஆரம்ப பிரிவு  வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக  ஒவ்வொரு வகுப்பறைகளுக்குமான  குப்பை கூடைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply