‘சேர் பெயில்’ அன்று; இன்று பைத்தியம்.! ஜனாதிபதியை விமர்சிப்பதாக பிரசன்ன தெரிவிப்பு

ஜனாதிபதி தோற்றுப் போனவர், சேர் பெயில் எனக் கூறி விமர்சித்த ஹரின் பெர்ணான்டோ எம்.பி, தற்போது ஜனாதிபதியை பைத்தியம் என விமர்சிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

வரவுசெலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று (22) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி பெயில் (தோல்வி) கூறிய எதிர்க்கட்சி எம்.பி ஹரின் பெர்ணான்டோ, தற்போது ஜனாதிபதியை பைத்தியம் என்று விமர்சிக்கிறார். 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர்.

யுத்தத்தை நிறைவு செய்ய தலைமை தாங்கியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எனவும் தெரிவித்தார்.

அரச தலைவர்களை எவ்வாறு பேசுவது என்பதை ஹரின் தெரிந்துகொள்ள வேண்டும். சுற்றுலா துறையினர் தொடர்பில் ஹரின் பேசுகிறார். ஆனால், நாட்டில் கொரோனா வைரஸை பரப்ப போராட்டங்களை செய்கிறார்கள்.

தற்போது மனோ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து உருவாகும் கொரோனா கொத்தணியில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply