பப்ஜியில் திளைத்திருந்த இளைஞன் நேற்றிரவு உயிரிழப்பு…!

பப்ஜி கேம் விளையாட்டில் திளைத்திருந்த இளைஞன் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சந்திவெளி பகுதியில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு – சந்திவெளியை சேர்ந்த 17 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றதாக இளைஞனின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் சம்பவ இடத்துக்கு சந்திவெளி பொலிசாருடன், நேரடியாக சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி ஆ. நஸீர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, கரடியனாறு பிரதேசத்தில் 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் தூக்கிலிட்டு உயிரிழந்துள்ள சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

கடமையை செய்யவிடாது ஊடகவியலாளரை படம்பிடித்து அச்சுறுத்திய இராணுவத்தினர்…!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply